UPDATED : நவ 13, 2023 12:00 AM
ADDED : நவ 13, 2023 11:15 AM
சென்னை:
திறந்தநிலை கல்வியில் சேரும் முன், அங்கீகார விபரங்களை தெரிந்து கொள்ளுமாறு, மாணவர்களுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை செய்துள்ளது.இதுகுறித்து, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., வெளியிட்ட அறிவிப்பு:
நாட்டில் உள்ள பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள், ஆன்லைன் படிப்புகள், திறந்தநிலை கல்வி போன்றவற்றை நடத்த, யு.ஜி.சி.,யின் தொலைநிலை கல்வி பிரிவில் அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், ஆன்லைன் மற்றும் தொலைநிலை படிப்பில் சேரும் மாணவர்கள், தாங்கள் சேரும் பாடப்பிரிவுகளுக்கு, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், யு.ஜி.சி.,யிடம் அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை தெரிந்து சேர வேண்டும். இந்த விபரங்களை, www.ugc.gov.in என்ற யு.ஜி.சி.,யின் இணையதளம் அல்லது deb.ugc.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
