UPDATED : ஜன 31, 2010 12:00 AM
ADDED : ஜன 31, 2010 08:34 AM
இதுகுறித்து, பத்திரிகையாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் கூறியதாவது: மக்கள், பல் மருத்துவர்கள் விகிதாச்சாரம் குறித்த தெளிவான கணக்குகள் தற்போது இல்லை. ஒரு லட்சம் பல் மருத்துவர்கள் இந்தியாவில் உள்ளனர். 72 சதவீதம் மக்கள் வாழும் கிராமப்புறங்களில், 20 சதவீதம் மருத்துவர்களும், 24 சதவீதம் மக்கள் வாழும் நகர்ப்புறங்களில் 80 சதவீதம் மருத்துவர்களும், தற்போது பணிபுரிகின்றனர். 500 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையும், ஐந்து லட்சம் பேருக்கு மருத்துவரே இல்லா நிலையும் இங்குள்ளது.
வடகிழக்கு இந்திய பகுதிகளில், பல் மருத்துவக் கல்லூரிகளே இல்லாத நிலை உள்ளது. ஆனால், கேரளாவில் 23, தமிழகத்தில் 29, கர்நாடகாவில் 45 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தற்போது 20 சதவீதம் வரையில் மருத்துவ பேராசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதை சரி செய்ய வேண்டும்.
உலக சுகாதார நிறுவனம், ஐ.சி.எம்.ஆர்., பல் மருத்துவ கவுன்சில் மற்றும் சுகாதார அமைச்சகம் இணைந்து, பொதுமக்களுக்கான பல் மருத்துவர்கள் எண்ணிக்கை, நோய்களின் தன்மை, சிகிச்சை முறைகள் இவை குறித்த முழுமையான சர்வே, அடுத்த வாரம் துவக்கப்படுகிறது.
இது இந்தாண்டில் முடியும். இதன் அடிப்படையில் பல் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படும். பல ஆண்டுகளுக்கு முன்பு, பல் மருத்துவம் படித்தவர்கள் நவீன மருத்துவம் குறித்த அறிவை பெற்றிருக்க வேண்டும். அவர்கள் தொடர் மருத்துவ படிப்புகளை பெற வேண்டியது அவசியம். இவ்வாறு பெறாதவர்களுக்கு, மருத்துவ பதிவு புதுப்பிக்கப்பட மாட்டாது.
இந்தியா முழுவதும் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு வருகிறார்களா என்பது குறித்து, பல் மருத்துவ கவுன்சில் அறிந்து கொள்ளும் வகையில் பயோமேட்ரிக் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.
