தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பயிலரங்கு

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பயிலரங்கு

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பயிலரங்கு


UPDATED : டிச 03, 2023 12:00 AM

ADDED : டிச 03, 2023 10:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 03, 2023 12:00 AM ADDED : டிச 03, 2023 10:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலை, வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில், உலக உணவு தினத்தை முன்னிட்டு நிலையான உணவு முறைகளுக்கான பொறியியல் அணுகுமுறைகள் என்ற பெயரில், சர்வதேச பயிலரங்கம், நேற்று நடந்தது.இதில், உணவு பதப்படுத்தும் துறைக்கு தேவையான நிலையான அணுகுமுறைகள், நிலையான உணவு முறை மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள், பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவம், இந்தியாவில் உருவாகி வரும் உணவு போக்குகள் குறித்து வல்லுநர்கள் விளக்கமளித்தனர்.வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, பொறியியல் கல்லுாரி டீன் ரவிராஜ், வேளாண் துறை டீன் வெங்கடேச பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us