UPDATED : டிச 23, 2023 12:00 AM
ADDED : டிச 23, 2023 05:06 PM
அ நிறம் | அளவு
கோவை:
கோவை மாவட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கூட்டம், தாமஸ் கிளப் அரசு ஊழியர் சங்கத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரசு, ராஜசேகரன், ஜெகனாதன் தலைமையில் நடந்தது. இதில், வரும் 28ம் தேதி சென்னை கோட்டை நோக்கிய முற்றுகை போராட்டத்தில் மாவட்டத்திலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. மாநில, மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
