தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பசுமை சாம்பியன் விருதுவிண்ணப்பிக்க அழைப்பு

பசுமை சாம்பியன் விருதுவிண்ணப்பிக்க அழைப்பு

பசுமை சாம்பியன் விருதுவிண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : டிச 29, 2023 12:00 AM

ADDED : டிச 29, 2023 10:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 29, 2023 12:00 AM ADDED : டிச 29, 2023 10:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:
 காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்த தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர், அமைப்புகளுக்கு வழங்கப்படுகின்ற பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
 காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்த தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கி, தலா ரூ.1 லட்சம் பண முடிப்பு வழங்கப்பட உள்ளது.சுற்றுச்சூழல் பாதுகாப்பை செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு இந்த விருது வழங்கப்படும்.பசுமை தயாரிப்புகள், தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், திடக்கழிவு, நீர் மேலாண்மை, நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்ற தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதை தகுதியாக கொண்டு மாசு கட்டுப்பாடு வாரியம், கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தேர்வு செய்யும்.www.tnpcb.gov.in என்ற தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். விவரங்களுக்கு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை அணுகலாம். 2024 ஏப். 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us