UPDATED : ஜன 09, 2024 12:00 AM
ADDED : ஜன 09, 2024 09:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி:
பூந்தமல்லி பார்வைத்திறன் குறைபாடு உடையோர் அரசு பள்ளியில், எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டத்தின் துவக்க விழா, நேற்று நடந்தது.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பங்கேற்று, துவக்கி வைத்தார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், துாய்மையான பள்ளி வளாகங்களை கட்டமைக்க, இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதில், பள்ளி கல்வித்துறையுடன் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசு கட்டுப்பாடு, ஊரக வளர்ச்சி, பொதுப்பணி, மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின்றன.நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி, திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர், எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.