UPDATED : பிப் 14, 2024 12:00 AM
ADDED : பிப் 14, 2024 09:31 AM
வியாசர்பாடி:
உலக வானொலி தினத்தை முன்னிட்டு, வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கர் அரசு கலை கல்லுாரியில் இந்திய வானொலி வரலாறு கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் வேணுபிரகாஷ் தலைமை தாங்கினார்.தாவரவியல் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியின் மற்றொரு பகுதியாக இந்திய பசுமை புரட்சி வெற்றியில் வானொலியின் பங்கு - ஓர் பின்னோக்கு பார்வை&' என்ற தலைப்பில் பேராசிரியர் தேவேந்திரன், நேற்று மாணவர்களிடையே உரையாற்றினார்.சுதந்திர இந்தியா எதிர்கொண்ட சவால்கள், ஐந்தாண்டு திட்டங்கள் நிறைவேற்றம், பசுமை புரட்சியின் மூலம் இந்தியா வேளாண் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற விதம், வானொலியின் பங்கு குறித்து படக்காட்சிகள் மூலம் விளக்கப்பட்டது.இதில் துறைத்தலைவர் பாலாஜி, பேராசிரியர் தங்கராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.