UPDATED : பிப் 15, 2024 12:00 AM
ADDED : பிப் 15, 2024 11:56 AM
முதுநிலை மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை விதிகளை பொறுத்தவரையில், மருத்துவ மாணவர்களுக்கு உரிய தங்கும் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அதேநேரம், மாணவர் விடுதிகளில், அவர்கள் தங்கி படிப்பது கட்டாயமில்லை.ஆனால், பல மாணவர்களிடம் இருந்து, புகார்கள் வந்தபடி இருக்கின்றன. கல்லுாரி விடுதிகளில் தங்குமாறு, கல்வி நிறுவனங்கள் கட்டாயம் செய்வதாகவும், அதிக தொகையை வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. இது, ஒழுங்குமுறை விதிகளுக்கு புறம்பான செயல்.இத்தகைய விதிமீறலில் ஈடுபடும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, அங்குள்ள மருத்துவ படிப்பு இடங்களை குறைத்தல், அபராதம் விதித்தல், மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனதேசிய மருத்துவ ஆணைய துணை செயலர், அஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.