UPDATED : மார் 09, 2024 12:00 AM
ADDED : மார் 09, 2024 09:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
நூலகங்களுக்கு இணையதளம் வாயிலாக புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் அறிவித்துள்ளார்.தமிழக பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் பிறப்பித்துள்ள அரசாணை விபரம்:
பொது நுாலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள, பிரத்யேக இணையதளம் உருவாக்கப்படும். புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்காக அமைக்கப்படும் வல்லுனர்கள் அடங்கிய புத்தக தேர்வுக்குழுவை அரசின் ஒப்புதல் பெற்று, பொது நுாலக இயக்குனரே நியமித்து கொள்ளலாம்.புத்தகங்கள் கொள்முதலுக்கு தேவைப்படும் துணை குழுக்களையும் அமைத்து கொள்ளலாம் என, பொது நுாலக இயக்குனருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

