sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு நடனம்

/

கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு நடனம்

கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு நடனம்

கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு நடனம்


UPDATED : ஏப் 15, 2024 12:00 AM

ADDED : ஏப் 15, 2024 10:19 AM

Google News

UPDATED : ஏப் 15, 2024 12:00 AM ADDED : ஏப் 15, 2024 10:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஒட்டுப்பதிவை வலியுறுத்தி கல்லுாரி மாணவர்கள் மின்னல் நடனம் ஆடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

புதுச்சேரியில், நுாறு சதவித ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பல்வேறு வகையில் தேர்தல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில், புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரி மாணவ, மாணவிகள், ஆங்கிலத்தில் பிளாஷ் மாப் என்றழைக்கப்படும் மின்னல் நடனம் ஆடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கடற்கரை சாலை தலைமைச் செயலகம் எதிரே நடந்த நிகழ்ச்சியில், மாணவர்களின் தேர்தல் விழிப்புணர்வு நடனத்தை பொதுமக்கள் பார்வையிட்டனர். அதில், வாக்காளர் கல்விக் கருத்துக்கள் அடங்கிய பாடல் மற்றும் கடைசி சுற்றில், வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி நடனம் ஆடினர்.

இந்த நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் லலிதா, வாக்காளர் கல்வி முதன்மை அதிகாரி லதா, உடற்பயிற்சி கல்வி இயக்குனர் ஜகதீஸ்வரி, பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் வாக்காளர் விழிப்புணர்வு பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.






      Dinamalar
      Follow us