UPDATED : ஏப் 16, 2024 12:00 AM
ADDED : ஏப் 16, 2024 10:48 AM

உடுமலை:
சமூக நலத்துறையின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. அங்கன்வாடி மையங்களில், 2 முதல் 5 வரை உள்ள குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்.
பள்ளிகளுக்கு முழுஆண்டு தேர்வு நிறைவடைந்த உடன் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஆனால் அங்கன்வாடி மையங்களுக்கு அவ்வாறு இல்லை. மேலும், மே மாதங்களில் குழந்தைகளின் வருகையும், மையங்களில் குறைவாகவே இருக்கும். கடந்தாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
நடப்பாண்டிலும், மே மாதத்திற்கு முன்பாகவே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உடுமலையில், 135, குடிமங்கலத்தில், 71, மடத்துக்குளத்தில், 77 அங்கன்வாடி மையங்களும் உள்ளன. மே 8 முதல் 22ம் வரை 15 நாட்களுக்கு கோடை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் முதல் வாரமும், இறுதி வாரமும் பணிசெய்யும் வகையில் விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், குழந்தைகளுக்கான சத்துமாவு கணக்கிட்டு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.