sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கோடை விடுமுறை தமிழுடன் கொண்டாட்டம்!

/

கோடை விடுமுறை தமிழுடன் கொண்டாட்டம்!

கோடை விடுமுறை தமிழுடன் கொண்டாட்டம்!

கோடை விடுமுறை தமிழுடன் கொண்டாட்டம்!


UPDATED : மே 14, 2024 12:00 AM

ADDED : மே 14, 2024 11:07 AM

Google News

UPDATED : மே 14, 2024 12:00 AM ADDED : மே 14, 2024 11:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் :
இந்தியா உட்பட உலக நாடுகளில் உள்ள மக்களுக்கு இணைய வழியில் தமிழ் கற்றுத்தருகிறோம் என்கிறார் மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி.

இன்றைய சூழலில், மாணவ சமுதாயத்தினர் மத்தியில், தமிழ் கற்பதில் ஆர்வம் குறைந்து வருகிறது. நடந்து முடிந்த பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கூட தமிழ் பாடத்தில், 100 மதிப்பெண் பெற்றவர்கள் மிக சொற்பம்.

இந்நிலையில், தமிழை வளர்க்க மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி, இணைய வழியில் பயிற்சி வழங்குகிறார்.


அவர் நம்மிடம் கூறியதாவது:

கடந்த மூன்றாண்டாக, MyTamilGuru என்ற 'ஆன்லைன்' தமிழ்ப்பள்ளியை கடந்த மூன்றாண்டாக நடத்தி வருகிறோம். இதன் உதவியுடன், இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மலேஷியா என பல நாடுகளில் இருந்தும் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் கற்றுள்ளனர்.
தமிழை எழுத, பேசுவதற்கு கற்றுக் கொள்ள, அனா, ஆவன்னா, தமிழ் இலக்கணம் குறித்த பார்வைக்கு, தேமதுரத் தமிழோசை, சிறுவர்களுக்கு தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்த பிள்ளைத்தமிழ் என, நான்கு வகுப்புகளை நடத்தி வருகிறோம். இதன் தொடர்ச்சியாக, 8 முதல், 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, தமிழை எழுதவும், படிப்பதற்கும் கற்றுக் கொடுக்க இளவேனில் என்ற சிறப்பு வகுப்பை நடத்தி வருகிறோம். அடுத்த மாதம், ஜூன் 4ம் தேதி வரை இப்பயிற்சி வழங்குகிறோம்.

இந்த கோடை விடுமுறையில் தமிழுடன் கழிக்க, mytamilgurugmail.com என்றஇ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us