தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உபரி ஆசிரியருக்கு உடனே டிரான்ஸ்பர்

உபரி ஆசிரியருக்கு உடனே டிரான்ஸ்பர்

உபரி ஆசிரியருக்கு உடனே டிரான்ஸ்பர்


UPDATED : ஜூன் 15, 2024 12:00 AM

ADDED : ஜூன் 15, 2024 10:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2024 12:00 AM ADDED : ஜூன் 15, 2024 10:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
மாணவர் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ள 1,862 ஆசிரியர்களை, தேவையான இடங்களுக்கு ஒரே நாளில் டிரான்ஸ்பர் செய்ய, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில், சில இடங்களில் பற்றாக்குறையோடும், சில இடங்களில் தேவைக்கு அதிகமாகவும் ஆசிரியர்கள் உள்ளனர். அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர்களுக்கான தேவை போக, 1,862 ஆசிரியர்களும், அவர்களுக்கான பணியிடங்களும் உபரியாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியர்களை 24 மணி நேரத்திற்குள் டிரான்ஸ்பர் செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு ஒன்றிய அளவில், உபரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் இன்று நடக்க உள்ளது. இதற்கான வழிமுறைகளை, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us