UPDATED : ஜூன் 28, 2024 12:00 AM
ADDED : ஜூன் 28, 2024 07:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை :
உடுமலையில், மேல்நிலை துணைத்தேர்வு பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
கடந்த கல்வியாண்டின் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு ஆப்சென்ட் ஆனவர்கள் ஜூன், ஜூலை மாதம் நடக்கும் மறுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர். நடப்பு கல்வியாண்டில் முதல் துணைத்தேர்வு துவங்கியுள்ளது. உடுமலையில் பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
ஜூன் 24ம் தேதி முதல் ஜூலை 1 வரை பிளஸ் 2 துணைத்தேர்வுகளும், ஜூலை 2 முதல் 9ம் தேதி வரை பிளஸ் 1 தேர்வுகளும் நடக்கிறது. தேர்வு காலை, 10:00 மணி முதல் மதியம், 1:15 மணி வரை நடக்கிறது.