UPDATED : ஜூலை 24, 2024 12:00 AM
ADDED : ஜூலை 24, 2024 09:25 AM
சென்னை:
சுற்றுலா மேம்பாட்டில் ஈடுபடும் பல்வேறு அமைப்பினருக்கு, தமிழக சுற்றுலா துறையின் சார்பில் வழங்கப்படும் உலக சுற்றுலா தின விருதுக்கு, அடுத்த மாதம், 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக கமிஷனர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா பயணியரின் மகிழ்ச்சி உள்ளிட்டவற்றில், சுற்றுலா துறை சார்ந்து இயங்குவோரை ஊக்கப்படுத்தும் வகையில், சுற்றுலா துறை சார்பில், உலக சுற்றுலா தினமான, செப்., 27ல் பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, சுத்தமான சுற்றுலா தளம், சுற்றுலா ஏற்பாட்டாளர், தங்குமிடம் உள்ளிட்ட, 17 விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை, www.tntourismawards.com என்ற இணைய தளத்தில் இருந்து பெற்று, ஆக., 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

