UPDATED : ஆக 29, 2024 12:00 AM
ADDED : ஆக 29, 2024 09:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை :
ஆனைமலை அருகே, ரமணமுதலிபுதுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இந்திய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டது.
மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் பங்கேற்று தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். டாக்டர் உமாவர்ஷினி, படைப்புகளை பார்வையிட்டு, அதன் செயல்முறைகளை பற்றி மாணவர்களிடம் விளக்கம் கேட்டு பாராட்டினார்.
முன்னாள் ஊராட்சி தலைவர் மகாலிங்கம் கண்காட்சியை பார்வையிட்டார். அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சூரிய குடும்பம் பற்றியும் சர்வதேச விண்வெளி நிலையம் பற்றி ஒலி, ஒளிக்காட்சி திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தலைமையாசிரியை அழகேஸ்வரி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.