UPDATED : செப் 26, 2024 12:00 AM
ADDED : செப் 26, 2024 05:29 PM

சென்னை:
குழந்தைகளுக்கான ஆரம்பபள்ளி கல்வி நிறுவனமான யூரோகிட்ஸ், ஹூரேகா எனும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இப்புதிய பாடத்திட்டத்தில் குழந்தைகள் எப்படி சிந்திக்க வேண்டும் என்றும் அதற்கான 20 விதமான சிந்திக்கும் வழிமுறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிறுவனமானது தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் 210 மையங்களை திறக்கத் திட்டமிட்டுள்ளது.
லைட் ஹவுஸ் லேர்னிங் நிறுவனத்தின் ப்ரி-கே பிரிவு (யூரோகிட்ஸ்) தலைமை நிர்வாக அதிகாரி சேஷசாய் கூறுகையில், பள்ளி செல்லும் குழந்தைகள் வெறும் பாடங்களை மட்டும் கற்காமல் வாழ்க்கையை எதிர்கொள்ளும் திறன்களும் இதில் கற்றுக்கொள்வார்கள், என்றார்.
யூரோகிட்ஸ் பாடத்திட்ட மேம்பாட்டுத் தலைவர் அனிதா மதன் கூறுகையில், கல்விப் படிப்பிற்காக குழந்தைகள் தயாராவதை விட, ஹூரேகா பாடத்திட்டத்தின் மூலம் உலகத்துடனும், சுற்று சூழலுடனும் நெருக்கமான உறவுகளை உருவாக்கவும், பிரச்சனைகளைத் தீர்க்கவும் , உலகத்துடன் அர்த்தமுள்ள வழிகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளும் மனநிலையை வளர்க்கவும் கற்றுக் கொள்வார்கள், என்றார்.
யூரோகிட்ஸ் தனது ஹாம்பட்டீ செயலியில் [HomeBuddy app] பாடத்திட்டத்தை கேள்வி - பதில் - தகவல் என உரையாடும் வகையில் உருவாக்கியுள்ளது.