UPDATED : செப் 30, 2024 12:00 AM
ADDED : செப் 30, 2024 11:43 AM
சென்னை:
தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்களும் உடனே ஒதுக்கப்பட்டன.
தமிழக அமைச்சரவை நேற்று முன்தினம் மாற்றி அமைக்கப்பட்டது. புதிதாக செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர். உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி வகித்து வந்த நிலையில் புதிய அமைச்சராக கோவி.செழியன் பொறுப்பேற்று கொண்டார்.
பதவியேற்றப்பின் கோவி.செழியன் கூறுகையில், முதல்வர் தன் அமைச்சரவையில் எனக்கு இடம் கொடுத்துள்ளார்; அவருக்கு மனமார்ந்த நன்றி. எனக்கு ஒதுக்கிய துறையின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் வகையில் என் பணிகள் இருக்கும், என்றார்.