UPDATED : அக் 15, 2024 12:00 AM
ADDED : அக் 15, 2024 10:57 PM

புதுச்சேரியில் செயல்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமான ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் எஜுகேஷன் அண்டு ரிசர்ச்-ல் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
படிப்புகள்:
1. பி.எஸ்சி., - நர்சிங்
கால அளவு: 6 மாதகால கட்டாய பயிற்சியுடன் 4 ஆண்டுகள்
2. பி.எஸ்சி., - துணை மருத்துவ அறிவியல் படிப்புகள்
கால அளவு: ஓர் ஆண்டு கட்டாய பயிற்சியுடன் 4 ஆண்டுகள்
பிரிவுகள்:
* பேச்சுலர் ஆப் மெடிக்கல் லெபாரெட்டரி சயின்சஸ் - பி.எம்.எல்.எஸ்.,
* அனெஸ்திசியா டெக்னாலஜி
* பேச்சுலர் ஆப் ஆப்தோமெட்ரி
* கார்டியாக் லெபாரெட்டரி டெக்னாலஜி
* டயாலசிஸ் தெரபி டெக்னாலஜி
* மெடிக்கல் லெபாரெட்டரி டெக்னாலஜி இன் பிளட் பேங்கிங்
* மெடிக்கல் ரேடியாலஜி அண்டு இமேஜிங் டெக்னாலஜி
* நியூரோடெக்னாலஜி
* நியூக்கிளியர் மெடிசின் டெக்னாலஜி
* பர்பியூசன் டெக்னாலஜி
* ரேடியோதெரபி டெக்னாலஜி
தகுதிகள்:
* இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
* நீட் - 2024 தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
* டிசம்பர் 31, 2024 தேதியின் படி, 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.
* 12ம் வகுப்பில் ஆங்கிலம் மற்றும் தேவையான அறிவியல் பாடப்பிரிவுகளில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளியினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://academic.jipmer.edu.in/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
அக்டோபர் 24
விபரங்களுக்கு:
https://jipmer.edu.in/