UPDATED : அக் 30, 2024 12:00 AM
ADDED : அக் 30, 2024 11:48 AM

திண்டுக்கல் :
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரியில் வருடாந்திர என்.சி.சி., பயிற்சி முகாம் அக். 16 முதல் 25 வரை நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தை பள்ளி ,கல்லுாரி மாணவர்கள் 500 பேர் கலந்து கொண்டனர்.
ராணுவ நடை பயிற்சி, துப்பாக்கி சுடுதல் பயிற்சி, தீயணைப்பு பயிற்சி, சி.பி.ஆர்., முதலுதவி பயிற்சி, யோகா, தடை தாண்டுதல் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் , சதுரங்கம், பூப்பந்து, ஓட்டப்பந்தயம், போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. முகாமின் இறுதியில் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு லெப்டினட் கர்னல் ஜெகதீசன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வின்சென்ட் ஆண்டனி ராஜ் பேசினார். சுபேதார்கள் மேஜர் விஸ்வனாதா, சசி உடனிருந்தனர். இதில் பி.எஸ்.என்.ஏ கல்லுாரியின் என்.சி.சி., மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். விழாவினை கல்லுாரி என்.சி.சி., அதிகாரி லெப்டினட் அருண் ஒருங்கிணைத்தார்.