UPDATED : மார் 17, 2025 12:00 AM
ADDED : மார் 17, 2025 08:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
சென்னை தரமணியில் உள்ள, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையம் செயல்படுகிறது.
இங்கு ஓராண்டு சுவடியியல் பட்டயப்படிப்பு, வாரத்தில் மூன்று நாட்கள் நடத்தப்படுகிறது. இதில், சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள், www.ulakaththamizh.in என்ற இணையதளத்தின் வாயிலாக, ஏப்ரல், 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு உண்டு.
சிறந்த பத்து மாணவர்களுக்கு, மாதந்தோறும் 3,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2254 2992 என்ற தொலைபேசி எண்ணிலோ, 96000 21709 என்ற மொபைல் போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.