UPDATED : ஆக 28, 2025 12:00 AM
ADDED : ஆக 28, 2025 08:48 AM

மதுரை :
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் வேளாண் கல்லுாரிகளில் நடத்தப்படும் இரண்டாண்டு டிப்ளமோ படிப்புக்கு மாணவர் சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறையில் இரண்டாண்டு டிப்ளமோ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 497 இடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஆக. 29 வரை சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டு இணையம் மூலமாகவும், நேரடியாகவும் மாணவர் சேர்க்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். டிப்ளமோ படித்த பின் டி.என்.பி.எஸ்.சி., மூலம் வேளாண் துறையில் உதவி வேளாண் அலுவலர் பணிகளுக்கும், தனியார் துறையில் வேளாண் தொழில்நுட்ப ஆலோசகர் பணிக்கும் செல்லலாம்.
விண்ணப்பத்தை https://tnau.ac.in/ இணையதளத்திலும் ugadmissions@tnau.ac.in லும் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது 0422 - 661 1200 / 94886 35077 / 94864 25076ல் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

