UPDATED : நவ 28, 2025 07:56 AM
ADDED : நவ 28, 2025 07:57 AM
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி துவக்கி வைத்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், குழந்தைகள் நலக்குழு தலைவர் மாடசாமி முன்னிலை வகித்தனர்.
பயிற்றுநர் ஆசிரியர் ஆறுமுகம் அகில இந்திய நுழைவுத்தேர்வுகள் மற்றும் கல்வி உதவித்தொகைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
பதிவுபெற்ற குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயிலும் குழந்தைகள், நிதி ஆதரவு திட்டம், கோவிட் பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள், அன்புக் கரங்கள் ஆகிய திட்டங்களில் பயனடையும் 10, 11, 12ம் வகுப்பு படிக்கும் 209 குழந்தைகள், பெற்றோர், பாதுகாவலர்கள் பங்கேற்றனர்.

