UPDATED : டிச 02, 2025 07:18 AM
ADDED : டிச 02, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரையில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் டிச.,13 ல் சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பது தொடர்பான ஆயத்தக் கூட்டம் மாநில அமைப்பு செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.
முன்னாள் மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் கர்ணன், இணை பொதுச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் முரளி, மாவட்ட தலைவர் சதீஷ்குமார், செயலாளர் செல்வம், பொருளாளர் தமிழ்குமரன், அமைப்பு செயலாளர் சோலைராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதுரை மாவட்டம் சார்பில் மாநில போராட்டத்தில் 300 பேர் பங்கேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலுார் கல்வி மாவட்ட தலைவர் ராஜா நன்றி கூறினார்.

