sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்


UPDATED : ஜன 06, 2026 06:54 PM

ADDED : ஜன 06, 2026 06:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 06, 2026 06:54 PM ADDED : ஜன 06, 2026 06:55 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:
விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு சமவேலைக்கு சம ஊதியம் வேண்டி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் சார்பில் நேற்று‎தொடர் காத்திருப்பு போராட்டம் துவங்கியது.

மாவட்ட மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் பஞ்சவர்ணம் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சந்தனகலா முன்னிலை வகித்தார்.‎ வட்டார மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் லட்சுமி,‎மாநில செயற்குழு உறுப்பினர் குகபிரசாத் ஆகிய உட்பட பலர் பங்கேற்றனர்.

இவர்கள் கூறியதாவது:


“இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மிக மிக குறைந்த கடைநிலை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை. தி.மு.க., ஆட்சி பெறுப்பேற்ற பின் 2023ல் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடை களைய மூன்று நபர் குழுவை கொண்டு வந்தனர்.

மூன்று ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சம வேலைக்கு சம ஊதியம்' கிடைக்கும் வரை எங்கள் ஊதிய மீட்பு காத்திருப்பு போராட்டம் தொடரும்” என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us