UPDATED : மார் 18, 2026 05:41 AM
ADDED : மார் 18, 2026 05:41 PM
விழுப்புரம்:
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
மாநில தலைவர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். பொருளாளர் தியாகராஜன், மாநில மகளிரணி செயலாளர் கிருஷ்ணகுமாரி முன்னிலை வகித்தனர்.
பொதுச் செயலாளர் தாஸ் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியருக்கு வழங்க வேண்டும்.
பொதுத்தேர்வு வினாத்தாள் திருத்தம், தேர்தல் பணிகளில் உடல்நிலை சரியில்லாத ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து, சிறப்பாக செயல்பட்ட வட்டார அமைப்பிற்கு, மாநில அமைப்பு சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மாவட்ட செயலாளர்கள் ரமேஷ், ஜெயானந்தம், பொற்செல்வன், நடராஜன், வேல்முருகன், பாலா, சுரேஷ், செந்தாமரை கண்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

