sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஆதித்யா கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

/

ஆதித்யா கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

ஆதித்யா கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

ஆதித்யா கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்


UPDATED : மார் 18, 2026 05:44 PM

ADDED : மார் 18, 2026 05:46 PM

Google News

UPDATED : மார் 18, 2026 05:44 PM ADDED : மார் 18, 2026 05:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
புதுச்சேரி ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 'பன்னாட்டு கருத்தரங்கம் அதியந்த்ரா 1.0' என்ற தலைப்பில் நடந்தது.

கருத்தரங்கினை கல்லுாரி நிறுவனர் ஆனந்தன் துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் அருணா வரவேற்றார். கல்லுாரி தாளாளர் அசோக் ஆனந்த், வித்யாநாராயண அறக்கட்டளை டிரஸ்டி அனுதா பூணமல்லி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக மலேசியா ஆசியா பசிபிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட குழு தலைவர் சாமுவேல் செல்வகுமார் பங்கேற்று, மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) குறித்தும், புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கினார்.

கருத்தரங்கில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் 950 பேர் பங்கேற்றனர்.

தொடர்ந்து மாணவர்களுக்கு மேலாண்மை, தொழில்நுட்பம், விளையாட்டு, பண்பாடு மற்றும் ஊடகம் ஆகிய துறைகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, சிறப்பிடம் பிடித்த சாரதா கங்காதரன் கல்லுாரிக்கு ஒட்டுமொத்த கோப்பை வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக புதுச்சேரி ஆதித்யா கல்வி நிறுவனம், மலேசியா ஆசியா பசிபிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன், கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம், ஆசியா பசிபிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட குழு தலைவர் செல்வகுமார், ஆதித்யா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்தன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.






      Dinamalar
      Follow us