UPDATED : மார் 19, 2026 06:45 PM
ADDED : மார் 19, 2026 06:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்:
தொடக்கக் கல்வி பட்டய தேர்வுக்கு தனித் தேர்வர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆனந்தி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மே, ஜூன் மாதம் நடக்க உள்ள தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு தனித் தேர்வர்கள் மார்ச் 26 முதல் ஏப்., 3 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வழங்கலாம்.
தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் இணைத்து, தேர்வர்கள் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் இப்பயிற்சி மையம் டி. கல்லுப்பட்டியில் அமைந்துள்ளது என்றார்.

