UPDATED : மார் 21, 2026 09:31 PM
ADDED : மார் 21, 2026 09:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி மற்றும் ஓசூர் சிவில் இன்ஜினியரிங் சங்கம் ஆகியவை இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம், மாணவர்களின் தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு உதவியாக இருக்கும்.
மாணவர்களுக்கான உள்ளக பயிற்சி, திறன் மேம்பாடு குறித்து, சிவில் இன்ஜினியர்ஸ் சங்க தலைவர் சுரேஷ்பாபு, அதியமான் கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
கல்லூரி தொழிற்சாலை உறவு தலைவர் தனசேகரன், சிவில் துறைத் தலைவர் சீனிவாசன், சிவில் இன்ஜினியர்ஸ் சங்க பொதுச்செயலாளர் கார்த்திக், செயற்குழு உறுப்பினர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

