UPDATED : மார் 31, 2026 08:51 AM
ADDED : மார் 31, 2026 08:51 PM

விழுப்புரம்:
விழுப்புரம் தனலட்சுமி கார்டன் ஸ்ரீ வித்யோதயா மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியின் 7ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
ஜி.ஏ., கல்வி அறக்கட்டளை தாளாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாக ஆலோசகர் ஞானாம்பாள் விஸ்வநாதன் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியை சுகன்யா செந்தில்நாதன், பள்ளி கல்வி ஆலோசகர் ஓவியா தியாகராஜன் வாழ்த்திப் பேசினர்.
சிறப்பு விருந்தினர்
தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பள்ளியின் பெருமைகளையும், கட்டமைப்பு வசதிகளையும் விளக்கினார்.
இதில், குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
குழந்தைகளின் கனவை நினைவாக்கும் விதமாக அவர்களின் விருப்பத்தினை எழுதி அச்சிட்டு சான்றிதழ்கள், ஸ்டெம் விருது வழங்கப்பட்டது. குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

