sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 05, 2026 ,பங்குனி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி

/

மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி

மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி

மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி


UPDATED : ஏப் 03, 2026 06:42 PM

ADDED : ஏப் 03, 2026 06:45 PM

Google News

UPDATED : ஏப் 03, 2026 06:42 PM ADDED : ஏப் 03, 2026 06:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:
விழுப்புரம் இ.எஸ்., கல்வியியல் கல்லூரியில், மாணவர்களிடம் மறைக்கப்பட்ட திறமைகளை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது.

இ.எஸ்.கல்விக் குழும தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் செந்தில்முருகன் வரவேற்றார். விழுப்புரம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் தாமரைகண்ணன், திட்ட மேலாளர் சீனுவாசன், சுவாமி விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கெஜலட்சுமி, பேராசிரியர் ஆதிநாராயணன், சென்னை மாநில கல்லூரி பேராசிரியர் பாலாஜி, பேராசிரியர்கள் சரவணதாசன், சச்சிதானந்தம், மணிவர்மன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில், இ.எஸ்., கல்வியியல் கல்லூரி, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, தெய்வனை அம்மாள் மகளிர் கல்லூரி, சுவாமி விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி, விழுப்புரம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று, பாடல், நடனம், வார்த்தை தேடல், மெஹந்தி, விளையாட்டு, இசைக்கருவி, நினைவாற்றல் சோதனை, கைவினை செய்தல் போன்ற போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.

நிறைவாக, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பேராசிரியர்கள் ரங்கநாதன், கணபதி ஆகியோர் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினர்.







      Dinamalar
      Follow us