sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 07, 2026 ,பங்குனி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

உயர்கல்வி மாணவர்களை திண்டாடவிட்ட தி.மு.க.,

/

உயர்கல்வி மாணவர்களை திண்டாடவிட்ட தி.மு.க.,

உயர்கல்வி மாணவர்களை திண்டாடவிட்ட தி.மு.க.,

உயர்கல்வி மாணவர்களை திண்டாடவிட்ட தி.மு.க.,


UPDATED : ஏப் 03, 2026 07:35 PM

ADDED : ஏப் 03, 2026 07:42 PM

Google News

UPDATED : ஏப் 03, 2026 07:35 PM ADDED : ஏப் 03, 2026 07:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உயர்கல்வி துறையை மேம்படுத்துவதாக, கடந்த தேர்தலின் போது, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின், 'பல்கலைகளின் வேந்தராக, கவர்னர் இருக்கக்கூடாது. முதல்வரே இருக்க வேண்டும்' எனக் கூறி, கவர்னருடன் மோதலில் ஈடுபட்டதால், உயர்கல்வி துறை வீழ்ச்சியை நோக்கி சென்றது. அரசு எடுத்த தவறான முடிவால், எட்டு பல்கலைகள் துணைவேந்தர் இல்லாமலே இயங்கி வருகின்றன. மேலும், அனைத்து பல்கலைகளும் நிதி சிக்கலில் தவித்து வருகின்றன.

ஆட்சிக்கு வந்ததும், உயர்கல்வி துறை மானிய கோரிக்கையின் போது, 4,000 புதிய பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் என, சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி, நியமனத்தை தள்ளிப் போட்டனர். ஆட்சி முடியும் தறுவாயில், 2,470 பேராசிரியர்களை நியமிக்க தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், தேர்வு முடிவு முழுமையாக வெளியிடப்படவில்லை. இதற்கு காரணம், அரசின் நிதி பற்றாக்குறை எனக் கூறப்பட்டது.

கல்லுாரிகளில் பேராசிரியர்களை நியமிக்க நிதி இல்லாததால், தொகுப்பூதியத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களும் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட, மாணவர்களின் நிலை திண்டாட்டமாகி விட்டது. இது மட்டுமின்றி, சட்டசபையில் அறிவிக்கப்பட்ட பல அறிவிப்புகள் செயல்பாட்டிற்கே வரவில்லை.

அதன் விபரம்:

அரசு கல்லுாரி ஆசிரியர்களுக்கு, முறையான பயிற்சி வழங்கப்படும். இதற்காக, கல்லுாரி ஆசிரியர், மாநில பயிற்சி மையம் அமைக்கப்படும்

மாநில உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்படும்

சென்னைக்கு அருகில், ஆளில்லா வான்கலன் எனப்படும் 'ட்ரோன்' சான்றிதழ் வழங்கும் சிறப்பு பிரிவு, 15 லட்சம் ரூபாய் மதிப்பில் நிறுவப்படும்

ஐந்து அரசு பாலிடெக்னிக்குகளில், 'ட்ரோன்' பயிற்சி மையங்கள், தலா 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நிறுவப்படும்

சென்னை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், ஆன்லைன் நுழைவுச் சீட்டு மற்றும் காட்சிப் பொருட்களுக்கு, 'க்யூ.ஆர்., கோடு' மற்றும் வலைதள செயலி, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏற்படுத்தப்படும்

சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்துக்கு, 'புதிய நடமாடும் அறிவியல் கண்காட்சி பஸ்' 80 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்படும்

சென்னை பல்கலை சேப்பாக்கம் வளாகத்தில், 250 மாணவியர் பயனடையும் வகையில், பெண்கள் விடுதி கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, அந்த இடத்தில், 'தோழி' விடுதி கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தோழி விடுதியில், பல்கலை மாணவியருக்கு தனி அறைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

கோவை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மின்சார வாகன இயக்க மையம் நிறுவப்படும்.







      Dinamalar
      Follow us