sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 10, 2026 ,பங்குனி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஜாப் ஒர்க் நிறுவனங்கள் நலிவு

/

ஜாப் ஒர்க் நிறுவனங்கள் நலிவு

ஜாப் ஒர்க் நிறுவனங்கள் நலிவு

ஜாப் ஒர்க் நிறுவனங்கள் நலிவு


UPDATED : ஏப் 08, 2026 05:30 PM

ADDED : ஏப் 08, 2026 05:33 PM

Google News

UPDATED : ஏப் 08, 2026 05:30 PM ADDED : ஏப் 08, 2026 05:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
ஜாப் ஆர்டர்கள் செய்யும் குறுந்தொழில் முனைவோர் நிலை மோசமாகியுள்ளதால், இயந்திர கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனை வோர் சங்கம் (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:


கோவையில் ஜாப் ஆர்டர்கள் அடிப்படையில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 20 ஆண்டுகளாக ஜாப் ஆர்டர்களுக்கான மணி கட்டணத்தை ஏற்றவில்லை. அப்போது மனிதர்கள் மூலம் தான் இயந்திரங்கள் இயக்கப்பட்டன.

இயந்திரத்தின் அளவை பொறுத்து ஒரு மணி நேரத்திற்கு ரூ.100 - 350 கட்டணம் வாங்கப்படுகிறது. இப்போது தானியங்கி இயந்திரங்கள் வந்துவிட்டன. அதற்கான முதலீட்டுக்கு நாங்கள், 600 மடங்கு அதிகம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த இயந்திரங்கள் மூலம் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. மூலப்பொருட்கள் விலை உயர்வால், ஜாப் ஆர்டர்களுக்கு கட்டணத்தை குறைக்கிறார்கள். ஏற்கனவே மூலப்பொருள், மின் கட்டணம் உயர்வு போன்ற நெருக்கடிகளை தாக்கு பிடிக்க முடியவில்லை.

இதே நிலை நீடித்தால், கோவையின் உற்பத்தி துறையே இல்லாமல் போய்விடும். இதனால், இயந்திரங்களுக்கான மணி கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்த உறுப்பினர்களுக்கு வலியுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோரின் சங்க (காட்மா) தலைவர் சிவக்குமார் கூறியதாவது:


மின் கட்டணம், தொழிலுக்கு பயன்படுத்தும் டூல்கள், உற்பத்தி கருவிகள், அளக்கும் கருவிகள், தொழிலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய், தொழில் வரி, இடம் வாடகை, போக்குவரத்து மற்றும் ஆட்கள் கூலி ஆகியவை உயர்ந்துள்ளன.

தொழிலை தொடர்ந்து நடத்தவே இயலாத நிலை. ஜாப் ஒர்க் செய்யும் தொழில் முனைவோருக்கு தொழிலில் எந்த லாபமும் கிடைப்பதில்லை. மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில்கள் நலிவடைந்து மூடும் நிலையில் உள்ளன.

எனவே 'லேபர் சார்ஜ்' அடிப்படையில் ஜாப் ஒர்க்கில் ஈடுபடும் தொழில் முனைவோர் தங்கள் இயந்திரங்களுக்கான மணி கட்டணத்தை 15 - 30 சதவீதம் வரை உயர்த்தினால் மட்டுமே தொழிலில் தாக்கு பிடிக்க முடியும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us