sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 24, 2026 ,சித்திரை 11, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு பள்ளியில் ரோபோ ஆசிரியை

/

அரசு பள்ளியில் ரோபோ ஆசிரியை

அரசு பள்ளியில் ரோபோ ஆசிரியை

அரசு பள்ளியில் ரோபோ ஆசிரியை


UPDATED : ஏப் 14, 2026 06:24 PM

ADDED : ஏப் 14, 2026 06:26 PM

Google News

UPDATED : ஏப் 14, 2026 06:24 PM ADDED : ஏப் 14, 2026 06:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுப்பி:
அரசு பள்ளியில் ஏ.ஐ., திறன் கொண்ட ரோபோ ஆசிரியை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

உடுப்பி மாவட்டம் குந்தாப்பூர் தாலுகாவில் வந்த்சே அரசு மாதிரி உயர் தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 'ஐரிஸ்' எனும் பெயருடைய ரோபோ ஆசிரியை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ரோபோ, ஆசிரியர்களுக்கு உதவி செய்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ரோபோவை 'மேக்கர்லேப்ஸ் ஏஜூடெக்' நிறுவனம் வடிவமைத்து உள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட முதல் ரோபோ, திருவனந்தபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 2024ல் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஐரிஸ் ரோபோ 20க்கும் மேற்பட்ட மொழிகளில் சரளமாக உரையாடும் திறன் படைத்தது. மாணவர்களுடன் சகஜமாக உரையாடுகிறது. ரோபோவிடம் மாணவர்கள் ஆர்வமாக கலந்துரையாடி வருகின்றனர்.

1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும், ரோபோ சகட்டுமேனிக்கு விடை அளித்து வருகிறது.

அரசு பள்ளியில் ரோபோ வருவதற்கு ஸ்ரீ மூகாம்பிகா அறக்கட்டளை காரணமாக இருந்து உள்ளது. சேலை அணிந்த ரோபோவுடன் மாணவர்கள் உற்சாகமாக கலந்துரையாடி வருகின்றனர்.







      Dinamalar
      Follow us