UPDATED : ஏப் 16, 2026 07:31 PM
ADDED : ஏப் 16, 2026 07:34 PM
10வது மார்க் தான் உன் வாழ்க்கையையே தீர்மானிக்கும் என்று சொன்னாலும், இப்ப இருக்கிற 2கே கிட்ஸ்க்கு உலகம் ரொம்பப் பெருசு. மதிப்பெண் ஒரு என்ட்ரி கார்டு தான், ஆனா 'திறமை' தான் அசல் விசிட்டிங் கார்டு!
டிஜிட்டல் சாம்ராஜ்யம்
இன்னைக்கு ஒரு ஸ்மார்ட்போன் இருந்தா உலகத்தையே ஜெயிக்கலாம். யூடியூப், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், கேமிங்னு பசங்க கலக்குறாங்க. ஆனா, இத வெறும் பொழுதுபோக்கா இல்லாம, ஒரு 'கரியரா' எப்படி மாத்துறதுன்னு யோசிக்கிறவர் தான் புத்திசாலி. வீடியோ எடிட்டிங், கன்டென்ட் கிரியேஷன் அப்படின்னு புதுசு புதுசா யோசிக்கணும்.
எது முக்கியம்?
மார்க் வாங்குறது ஈஸி, ஆனா ஒரு விஷயத்தை மத்தவங்களுக்குப் புரிய வைக்கிற 'கம்யூனிகேஷன்' வளர்த்துக்கிறது தான் கஷ்டம். நீங்க எடுக்கப்போற குரூப் எதுவா வேணா இருக்கட்டும், ஆனா அந்தத் துறையில நீங்கதான் 'கிங்'கா இருக்கணும்.
பத்தாம் வகுப்பு முடிச்சது ஒரு ஆரம்பம் தான். உங்க மேல உங்களுக்குத் நம்பிக்கை இருந்தா, நீங்க போற பாதை தான் மத்தவங்களுக்கு முன்னுதாரணம். கனவு காணுங்க, ஆனா அந்த கனவை நனவாக்க இப்போதே களத்துல இறங்குங்க!
'பாஸ்' மைண்ட்செட் வரணுமா?
வேலைக்குப் போற காலம் போயி, இப்ப நாலு பேருக்கு வேலை கொடுக்குற 'தொழில் முனைவர்' ஆகுறது தான் இப்ப இருக்கிற மாணவர்களோட கனவு. அந்த 'பாஸ்' மைண்ட்செட்ட வளர்த்துக்க இது தான் சரியான வயசு.
டாக்டர், இன்ஜினியர் தாண்டி இப்ப டேட்டா சயின்ஸ், ஏ.ஐ., ஸ்பெஷலிஸ்ட், சைபர் செக்யூரிட்டினு ஏகப்பட்ட ஆப்ஷன்ஸ் இருக்கு. உலகத்துல எதுக்கு டிமாண்ட் இருக்கோ, அதை இப்பவே தெரிஞ்சுக்க ஆரம்பிக்கணும்.
மார்க் கம்மியா வந்தா வாழ்க்கை முடிஞ்சுடுச்சுன்னு நினைக்கிறதெல்லாம் பழைய ஸ்டைல். 'பெயிலியர்'தான் சக்சஸுக்கான முதல் படி. ஜாப் தேடுறவரா இல்லாம, ஜாப் கிரியேட் பண்றவரா மாறணும்னா புதுசு புதுசா எக்ஸ்பிரிமென்ட் பண்ணிட்டே இருக்கணும்.
'உங்க லைப்... உங்க சாய்ஸ்' மத்தவங்களுக்காக இல்லாம, உங்களுக்கு எதுல ஆர்வம் இருக்கோ அதுல உங்க முத்திரையைப் பதிங்க. இந்த உலகம் உங்களுக்காகக் காத்துட்டு இருக்கு. கெத்தா கெளம்புங்க!

