UPDATED : ஏப் 17, 2026 05:25 PM
ADDED : ஏப் 17, 2026 05:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
1 முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வு முடிந்த நிலையில், ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை தொடங்கியது.
பள்ளி இறுதி நாளான ஏப்ரல் 16ல், தேர்வுகள் முடிந்ததும் மாணவர்கள் நண்பர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டதோடு, சீருடைகளில் பேனாவால் பெயர்கள் மற்றும் பள்ளி நாட்களில் நடந்த சுவாரசியமான நினைவுகளை எழுதி மகிழ்ந்தனர். நீண்ட விடுமுறைக்காக பிரிய வேண்டிய வருத்தமும், விடுமுறைக்கான உற்சாகமும் ஒருசேர காணப்பட்டது.
மே முதல் வாரத்தில் ரிசல்ட் வெளியாகும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறக்கும்.
வரும் கல்வியாண்டு (2026 - 27) முதல், 1 முதல் 3ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அறிமுகம் ஆகிறது. இதற்காக, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூன் 1, 2 தேதிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

