தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆர்.என்., ஆக்ஸ்போர்டு பள்ளி சாதனை

ஆர்.என்., ஆக்ஸ்போர்டு பள்ளி சாதனை

ஆர்.என்., ஆக்ஸ்போர்டு பள்ளி சாதனை


UPDATED : ஏப் 19, 2026 10:16 AM

ADDED : ஏப் 19, 2026 10:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 19, 2026 10:16 AM ADDED : ஏப் 19, 2026 10:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
ப.வேலுார், பாண்டமங்கலம் ஆர்.என்., ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவர்கள், பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வில், சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவர் ஆகாஷ் பிரணவ், 500க்கு, 481 மதிப்பெண் பெற்றுள்ளார். அவர், தமிழ், - 100, ஆங்கிலம் - 91, கணிதம் - 95, அறிவியல் -100, சமூக அறிவியல் - 95, மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்தார்.

மாணவர் அபிஷ்ரேய், தமிழ் - 99, ஆங்கிலம் 93, கணிதம் - 95, அறிவியல் - 97, சமூக அறிவியல் - 96 என, 480 மதிப்பெண் பெற்று, 2ம் இடம் பிடித்தார். மாணவி சஷ்மிதா, தமிழ் - 100, ஆங்கிலம், 94, கணிதம் - 95, அறிவியல் - 94, சமூக அறிவியல் - 95, என, 478 மதிப்பெண் பெற்று, 3ம் இடம் பிடித்தார்.

மாணவி அதிஸ்ரீ, தமிழ் - 99, ஆங்கிலம் - 95, கணிதம் - 94, அறிவியல் - 94, சமூக அறிவியல் - 94, என, 476 மதிப்பெண் பெற்று, 4ம் இடம் பிடித்தார். இதே போல், மாணவர், ஸ்ரீநித்திஷ், - 475 மதிப்பெண் பெற்றார். தேர்வு எழுதிய, 39 மாணவ, மாணவியர்களில், ஆகாஷ் பிரணவ், சஷ்மிதா, விகாஷினி ஆகியோர் தமிழ் பாடத்தில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மாணவர் ஆகாஷ் பிரணவ், அறிவியல் பாடத்தில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களை, கல்வி நிறுவன தலைவர் சண்முகம், தாளாளர் சக்திவேல், செயலாளர் ராஜா, இயக்குனர்கள் அருள், சேகர், சம்பூரணம், பப்ளிக் பள்ளி முதல்வர், மெட்ரிக் பள்ளி முதல்வர், கிட்ஸ் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us