UPDATED : ஏப் 20, 2026 10:45 AM
ADDED : ஏப் 20, 2026 10:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
மத்திய அரசின் பெரு நிறுவன விவகாரங்களுக்கான துறை சார்பில், பிரதமரின், 'இன்டர்ன்ஷிப்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுதும் 500 நிறுவனங்களில், கல்லூரி இறுதியாண்டு மாணவ, மாணவியருக்கு, மாதந்தோறும் ஊக்கத் தொகையுடன், 'இன்டர்ன்ஷிப்' வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., தவிர்த்து, மற்ற பல்கலை, கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் என, பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.
விருப்பம் உள்ளோர், https://pminternship.mca.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு மாதமும் 9,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

