sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 23, 2026 ,சித்திரை 10, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை

/

விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை

விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை

விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை


UPDATED : ஏப் 21, 2026 07:10 PM

ADDED : ஏப் 21, 2026 07:11 PM

Google News

UPDATED : ஏப் 21, 2026 07:10 PM ADDED : ஏப் 21, 2026 07:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2026 - 27ம் ஆண்டிற்கான விளையாட்டு விடுதி மாணவர்கள் சேர்க்கை மே 7, 8ல் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

7 முதல் 9ம் வகுப்பு, பிளஸ் 1 வரையான மாணவர்களுக்கு மே 7, மாணவிகளுக்கு மே 8 காலை 07:00 மணி முதல் தேர்வு நடக்கும். ஆடவர், மகளிர் தடகளம், கூடைபந்து, கால்பந்து, ஹாக்கி, கபடி, வாலிபால், ஹேண்ட்பால், ஆடவர் கிரிக்கெட் போட்டிக்கான தேர்வுக்கு பிறப்புச் சான்றிதழ், ஆதார் நகல், பள்ளி மாணவருக்கான ஆவணம், விளையாட்டு சான்றிதழ்களுடன் வரவேண்டும்.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை www.sdat.tn.gov.in ல் பதிவிறக்கம் செய்து மே 3க்குள் அனுப்ப வேண்டும். மாவட்ட அளவில் தேர்வானவர்கள் மாநில தேர்வுக்கு தகுதி பெறுவர்.

மேலும், இதே வகுப்பைச் சேர்ந்த வாள்சண்டை, ஜூடோ, குத்துச்சண்டை, பளு தூக்குதல், வூஷூ, நீச்சல், மல்யுத்தம், டேக்வாண்டோ, மல்லர் கம்பம், ஸ்குவாஷ் விளையாட்டுகளுக்கான மாநில அளவிலான நேரடி தேர்வு சென்னை, தஞ்சை, திருச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், தூத்துக்குடியில் மே 12ம் தேதி காலை 07:00 மணி முதல் நடக்கிறது.

www.sdat.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மே 3க்குள் அனுப்ப வேண்டும். இத்தகவலை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us