UPDATED : ஏப் 23, 2026 10:39 PM
ADDED : ஏப் 23, 2026 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்:
ஸ்ரீராமபுரம் வித்விதா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் சாமிநாதன் தலைமை வகித்து சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதன்மை இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
காந்திகிராமம் கிராமிய பல்கலை துணைவேந்தர் பஞ்சநாதம் கல்வி செயல்திறன், வருகைப்பதிவில் முதன்மை வகித்த மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கினார். திண்டுக்கல் என்.சி.சி., கமாண்டிங் ஆபிஸர் ஜெகதீசன் மழலையர்களுக்கு பட்டம் வழங்கினார்.
பள்ளி தாளாளர் சித்தார்த்தன், செயலாளர் கவுதமன், பள்ளி அறங்காவலர்கள் சுகன்யா, ராதிகா பங்கேற்றனர். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் நர்மதாஸ்ரீ, கல்வி ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

