UPDATED : மே 03, 2026 02:33 PM
ADDED : மே 03, 2026 02:34 PM
சேலம்:
சென்னையில், 'சக்சஸ் வெர்ஸ் பவுண்டேஷன்' அமைப்பு, ஐ.சி.எப்.ஏ.ஐ., குழுமத்துடன் இணைந்து, தேசிய கருத்தரங்கை, உயர்கல்வி துறை எதிர்காலத்தை வடிவமைக்கும் நோக்கில் நடத்தியது.
அதில் சேலம் நாலெட்ஜ் அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், சிறப்பு விருந்தினராக பேசினார். குறிப்பாக எதிர்கால தொழில்துறை முற்றிலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியக்கம் சார்ந்ததாக இருக்கும் என்றும், தரவு அறிவியல் மெஷின் லேர்னிங் போன்ற துறைகளில், மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பேசினார்.
தொடர்ந்து கல்வி நிறுவனங்களில் சிறப்பான தாக்கத்தை ஏற்ப-டுத்திய துறைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரி, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதை, நாலெட்ஜ் அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், வேலைவாய்ப்பு துறை இயக்குனர் ராஜேந்திரன் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
இதையடுத்து, சக்சஸ் வெர்ஸ் பவுண்டேசன், ஐ.சி.எப்.ஏ.ஐ., குழுமத்துக்கு, நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரி அறக்கட்டளை செயலர் குமார், பொருளாளர் சுரேஷ்குமார், கல்லுாரி முதல்வர் விசாகவேல் ஆகியோர் நன்றி தெரிவித்தனர். மேலும் பேராசிரியர், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

