UPDATED : மே 08, 2026 09:31 PM
ADDED : மே 08, 2026 09:33 PM
அ நிறம் | அளவு
ஈரோடு:
ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் சேர்வதற்காக விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு, மாவட்ட தேர்வு போட்டி, ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் நேற்று நடந்தது.
இதற்காக மாவட்டத்தில் இருந்து, 90 மாணவர், 60 மாணவியர் என, 150 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் மாணவர்களுக்கான மாவட்ட தேர்வு விளையாட்டு போட்டி நேற்று நடந்தது.
இதில் உரிய மதிப்பெண் பெற்று தேர்வாகும் மாணவர்கள் வரும், 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வர். மாணவிகளுக்கான மாவட்ட தேர்வு போட்டி இன்று நடக்கிறது.
