sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறுவர், சிறுமியருக்கு கோடைகால பயிற்சி

சிறுவர், சிறுமியருக்கு கோடைகால பயிற்சி

சிறுவர், சிறுமியருக்கு கோடைகால பயிற்சி


UPDATED : மே 08, 2026 09:33 PM

ADDED : மே 08, 2026 09:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2026 09:33 PM ADDED : மே 08, 2026 09:35 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், சிறுவர், சிறுமியருக்கு நடந்து வரும் கோடைக்கால பயிற்சியில், 97 பேர் பங்கேற்றுள்ளனர்.

சிறுவர்களின் கலை ஆர்வத்தை தூண்டும் வகையில், ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், சிறுவர், சிறுமியருக்கு பகுதி நேர கலைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் உள்ள ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், கோடைக்கால கலைப்பயிற்சி முகாம் கடந்த, 6ல் துவங்கி வரும், 15 வரை நடக்கிறது. காலை, 10:00 முதல், 12:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில், 5 வயது முதல், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர், பரத நாட்டியத்தில், 24 பேர், குரலிசையில், 13 பேர், யோகாவில், 20 பேர், ஓவியம் வரைவதில், 40 பேர் என மொத்தம், 97 மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.

நேற்று நடந்த பயிற்சியில், தலைமை ஆசிரியர் திரிவேணி தலைமையில், ஜவகர் சிறுவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மற்றும் திட்ட அலுவலர் ஞானசக்தி பார்வையிட்டார்.

பயிற்சி நிறைவு நாளில் மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. மேலும் விபரங்களுக்கு, ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலரை, 99433 51775 அல்லது 0427 - 2386197 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us