UPDATED : மே 17, 2026 12:54 PM
ADDED : மே 17, 2026 12:57 PM
மானாமதுரை:
மானாமதுரை அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருவதாக முதல்வர் சேகர் தெரிவித்துள்ளார்.
மானாமதுரை அரசு ஐ.டி.ஐ.,யில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 2வருட படிப்புகளான மோட்டார் மெக்கானிக், சர்வேயர், எலக்ட்ரீசியன், ரெப்ரிஜிரேட்டர் மற்றும் ஏ.சி., மெக்கானிக் ஆகிய படிப்புகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் சேருபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை, விலையில்லா சீருடைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், வரைபட உபகரணங்கள், பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
மேலும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகின்றன. 6 முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.1000 வழங்கப்படுகிறது.
மொத்தம் 92 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இப்பயிற்சிகளில் சேர விரும்புபவர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், 2 நபர்களின் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் ஆன்லைன் மூலம் www.skilltranining.tn.gov.in என்ற இணையதளத்திலும், மானாமதுரை சிவகங்கை ரோட்டில் செய்களத்தூர் விலக்கு ரோடு அருகே உள்ள ஐ.டி.ஐ.,யிலும் நேரடியாக சேர்ந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
