UPDATED : மே 21, 2026 12:22 PM
ADDED : மே 21, 2026 12:23 PM
அ நிறம் | அளவு
கோவை:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலையுடன் இணைக்கப்பட்ட, தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறையின் கீழ் செயல்படும் கல்லூரிகளில், 2026 - 27ம் கல்வியாண்டுக்கான தோட்டக்கலை டிப்ளமோ (ஆங்கில வழி) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.
பிளஸ் 2வில் தாவரவியல், விலங்கியல் அல்லது வேதியியல், உயிரியல் அல்லது வேளாண் தொழிற்கல்வி பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் https://tnau.ucanapply.com என்ற தளத்தின் வாயிலாக வரும் ஜூன் 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர்கள், பல்கலை தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கவுன்சிலிங் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழக அரசின் பிரிவு வாரியான இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும்.
இத்தகவலை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வெளியிட்டுள்ளது.
