sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மகளிர் ஐ.டி.ஐ.,யில் சேர விண்ணப்பிக்கலாம்

மகளிர் ஐ.டி.ஐ.,யில் சேர விண்ணப்பிக்கலாம்

மகளிர் ஐ.டி.ஐ.,யில் சேர விண்ணப்பிக்கலாம்


UPDATED : மே 29, 2026 06:38 PM

ADDED : மே 29, 2026 06:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 29, 2026 06:38 PM ADDED : மே 29, 2026 06:39 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சேலம்:
சேலம், கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், புரோகிராமிங் அசிஸ்டன்ட், பிரென்ட் ஆபிஸ் அசிஸ்டன்ட், ஸ்டெனோகிராபர், செகரெட்டியரியல் அசிஸ்டன்ட் (ஆங்கிலம்), டிராப்ட்ஸ்மென் சிவில், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக், எலக்ட்ரீஷியன், ரெப்ரிஜெரேட்டர் அண்ட் ஏர் கண்டிஷனிங் டெக்னீஷியன் ஆகிய தொழிற்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், பட்டம் பெற்றவர்களும் சேரலாம். மாணவியர் சேர்க்கை நடக்கிறது. அதற்கு வரும் ஜூன், 3 வரை, www.skillltraining.in.gov.on என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

சேர விரும்புவோர், உரிய சான்றிதழ்கள், புகைப்படம், விண்ணப்ப கட்டணம், 50 ரூபாயை, 'டெபிட் கார்டு' அல்லது நெட் பேங்கிங், போன்பே, ஜிபே மூலம் செலுத்த வேண்டும்.

பயிற்சியின் போது மாதந்தோறும், 750 ரூபாய் உதவித்தொகை, 6 முதல், 10ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அனைத்து மாணவியருக்கு விலையில்லா சீருடை, சைக்கிள், பாடப்புத்தகங்ககள், வரைபட கருவிகள், பஸ் பாஸ் வழங்கப்படும்.

பயிற்சிக்கு பின் வளாக தேர்வு நடத்தி முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும் என, கலெக்டர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us