UPDATED : ஜூன் 03, 2026 08:01 PM
ADDED : ஜூன் 03, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சார்பில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று துண்டு பிரசுரம் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளியில் உள்ள சிறப்பு அம்சங்களாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், காற்றோட்டமான வகுப்பறைகள், மாணவர்களுக்கான வெளியரங்க விளையாட்டு பொழுதுபோக்கு அசம்சங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் பொருட்கள், காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்டவை குறித்தும் விளக்கப்பட்டது. தலைமையாசிரியர் தினகரன், ஆசிரியர் சத்தியா மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
