UPDATED : ஜூன் 10, 2026 01:32 PM
ADDED : ஜூன் 10, 2026 01:32 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்:
தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கலை ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் கலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் அதிகளவில் உள்ளன. இப்போது ஆயிரத்திற்கும் குறைவான ஆசிரியர்களே பணியில் உள்ளனர். கடந்த மே 31ல் 20க்கும் மேற்பட்ட கலை ஆசிரியர்கள் ஓய்வு பெற்றனர்.
இதனால் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகரித்தது. எனவே, காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு முன்வர வேண்டும் என கலை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கலை ஆர்வம் கொண்டோரும் அதிகரிப்பதால் மாநகராட்சிக்கு ஒரு ஓவிய கல்லூரி துவங்க வேண்டும் என எதிர்பார்க்கும் ஆசிரியர்கள், தங்களுக்கான பயிற்சி பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள சூழலில், அதை நடத்தவும் வலியுறுத்தி உள்ளனர்.
