தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உதவி தொகையுடன் தொல்லியல் படிப்பு

உதவி தொகையுடன் தொல்லியல் படிப்பு

உதவி தொகையுடன் தொல்லியல் படிப்பு


UPDATED : ஜூன் 15, 2026 10:53 AM

ADDED : ஜூன் 15, 2026 10:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2026 10:53 AM ADDED : ஜூன் 15, 2026 10:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை, எழும்பூரில் இயங்கும், தமிழக தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தில், இரண்டாண்டு கால தொல்லியல், கல்வெட்டியல், அருங்காட்சியகவியல் மரபு மேலாண்மை மற்றும் நாணயவியல் பிரிவுகளில், முதுநிலை பட்டயப்படிப்புளும், ஓராண்டு கால சுவடியியல், முதுநிலை பட்டய படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன.

எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடக்கும். தேர்வாகும் மாணவர்களுக்கு, மாதாந்திர உதவித் தொகையாக, 8,000 ரூபாய் வழங்கப்படும்.

விருப்பம் உள்ளோர், 'www.tnarch.gov.in' என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, உரிய சான்றிதழ்களுடன், 'ஆணையர், தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை - 600008' என்ற முகவரிக்கு, ஜூலை 8க்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 0023 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us