UPDATED : ஜூன் 15, 2026 10:59 AM
ADDED : ஜூன் 15, 2026 11:01 AM

சென்னை:
“அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கு, செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய பயிற்சிகள் வழங்க வேண்டும்,” என, அமைச்சர் சரத்குமார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, அண்ணா நிர்வாக பணியாளர் கல்லுாரியில், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், அமைச்சர் சரத்குமார் பேசுகையில், “அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கு, செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்களுடன் பயிற்சிகள் வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். போட்டி தேர்வுகள் பயிற்சி மையங்களின் வழியே, தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்,” என்றார்.
பேராசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, பேராசிரியர்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
